×

ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: ஒன்றிய பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கப்பட்ட மானியம் மிகவும் குறைவாக இருப்பதை கண்டித்து வரும் பிப்ரவரி 7ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா கூறியிருப்பதாவது:
10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு கர்நாடகாவை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அநீதியைக் கண்டித்து டெல்லியில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்துகிறது. டெல்லியில் நாளை நடைபெறும் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது அல்ல. கர்நாடகா மக்களுக்கான போராட்டம்.

நாங்கள் இதுவரை பொறுமையாக இருந்துவிட்டோம். இப்போது அநீதிக்கு எதிரான குரலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ.5,300 கோடி வழங்குவோம் என ஒன்றிய அரசு தந்து பட்ஜெட்டில் அறிவித்தது. ஓராண்டாகியும் இதுவரை இந்த நிதியை ஒன்றிய அரசு வழங்கவே இல்லை.

நாட்டின் மாநிலங்கள் வழங்கும் வரி வருவாயை பகிர்ந்து அளிக்கத்தான் நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது வரை மொத்தம் 16 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் நிதி ஆணையம் கர்நாடகாவுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. நிதி இழப்பை சரி செய்ய கர்நாடகாவுக்கு ரூ5,495 கோடி சிறப்பு நிதி ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைத்தது. இதனையும் கூட ஒன்றிய அரசு தரவில்லை.

கடந்த 15-வது நிதி ஆணையம் கர்நாடகாவுக்கு ரூ73,593 கோடி நிதியை குறைத்துவிட்டது. கர்நாடகா, ஒன்றிய அரசுக்கு ரூ.100 கொடுத்தால், கர்நாடகாவுக்கு ரூ.12 அல்லது ரூ.13 தான் ஒன்றிய அரசு தருகிறது. கர்நாடகா மட்டும் ஆண்டுக்கு ரூ.4.30 லட்சம் கோடி வரி செலுத்துகிறது. இதில் வெறும் ரூ.50,257 கோடி மட்டுமே கர்நாடகாவுக்கு கிடைக்கிறது. 15-வது நிதி ஆணையத்தை அமைத்த பின்னர் ரூ.1.87 லட்சம் கோடி இழப்பு கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது.

மேகதாது திட்டத்துக்கும் ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை. ஆகையால் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை கர்நாடகா காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்துகிறது. இதில் அனைத்து கட்சி கர்நாடகா எம்பிக்களும் பங்கேற்க வேண்டும். டெல்லி போராட்டத்தில் நாளை பங்கேற்காமல் இருந்தால் அது கர்நாடக மக்களுக்கு செய்கிற பெருந்துரோகம் என சித்தராமையா கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi Jantar Mander ,Union State ,Karnataka ,Minister ,Siddaramaiah ,Bangalore ,Chief Minister ,EU ,Delhi ,Jantar Mantar ,EU Government ,Dinakaran ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...