×

மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை : மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநில அரசின் நிதிநிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவது கடந்த சில ஆண்டுகளில் வேகமாக மோசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மாநில நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசின் தலையீட்டை எதிர்த்து கேரள அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

The post மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Kerala Government ,Union Government ,State Government ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,government ,Tamil Nadu ,Chief Minister M.K.Stalin ,Kerala ,Pinarayi Vijayan ,M.K.Stalin ,
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...