×

பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து


டெல்லி: பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது. இந்த சண்டிகர் மாநகராட்சிக்கு சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இண்டியாகூட்டணி இணைந்து எதிர்கொண்டது. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது.

இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்ட நிலையில், i.n.d.i.a கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.இதில் தேர்தலுக்கு முன்பு i.n.d.i.a கூட்டணிக்கு கவுன்சிலர்கள் அதிகம் இருப்பதால் அவரே வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது இந்த மேயர் தேர்தலில் பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வீடியோ வெளியிட்டன.

மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகத்தை படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்ததை சுட்டிக்காட்டி முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும். சாதாரண மேயர் பதவியாக இருந்தால் கூட பதவியை பிடிக்க எதையும் செய்வார்கள். கர்நாடகாவில் தொடங்கி மணிப்பூர், ம.பி., சண்டிகர் வரை ஆட்சி அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது என்பதில் அதே கதை நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான தீம் பாடல் ஜனநாயகத்தை காப்பாற்று என்ற வார்த்தைகளில் தொடங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

 

The post பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Former Union Minister ,P Chidambaram ,Delhi ,P. Chidambaram ,Chandigarh ,Punjab ,Haryana ,Chandigarh Corporation ,Dinakaran ,
× RELATED சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார...