×

பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் : ப.சிதம்பரம் கருத்து

சென்னை : பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த முறைகேட்டை தலைமை நீதிபதி கண்டித்ததை சுட்டிக்காட்டி பேசிய ப.சிதம்பரம், சாதாரண மேயர் பதவியாக இருந்தால் கூட பதவியை பிடிக்க எதையும் செய்வார்கள். கர்நாடகாவில் தொடங்கி மணிப்பூர், ம.பி., சண்டிகர் வரை ஆட்சி அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது என்பதில் அதே கதை. மக்களவை தேர்தலுக்கான தீம் பாடல் ஜனநாயகத்தை காப்பாற்று என்ற வார்த்தைகளில் தொடங்கப்பட வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பதவிவெறி பிடித்த கட்சி, தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் : ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Tags : P Chidambaram ,Chennai ,Former Union Minister ,P. Chidambaram ,Chief Justice ,Chandigarh ,
× RELATED சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார...