×

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

 

பெரியகுளம், பிப். 6:பெரியகுளம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரது வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாணவியின் உறவினர் ஜீவானந்தம் (23) அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதற்கிடையே அவர் பலமுறை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாணவி கர்ப்பமானார். இதையடுத்து நடந்தவை குறித்து அவர் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்தனர்.

The post மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Peryakulam ,Peryakulam Bhatalamman Temple Street ,
× RELATED நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து...