×

நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து குறையலை கும்பக்கரையில் அலைமோதும் கூட்டம்

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பில் மழையில்லாததால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. ஆனாலும், அருவியில் குளிக்க கூட்டம் அலைமோதி வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு நீர்வரத்தானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் வெள்ளக்கெவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையினால் வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது.

ஆனாலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர். அருவியில் குறைந்த அளவில் வரும் நீரில் ஒவ்வொரு நபராக குளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். குளிக்கும் இடத்தை ஆண்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் பெண்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் இப்பிரச்னையை சரி செய்ய வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து குறையலை கும்பக்கரையில் அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kumbakkara ,Beriyakulam ,Kumbakarai Baru ,Peryakulam ,Theni district ,Kumbakarai River ,Kumbakarya Waves ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் மலைப்பகுதியில்...