×

திருப்பூரில் சமூக நீதி மாணவர் இயக்க கருத்தரங்கம்

 

திருப்பூர்,பிப்.6: திருப்பூரில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில், வெல்லட்டும் காந்திய இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. த.மு.மு.க. மாவட்ட தலைவர் நசீர்தீன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் அபுசாலிஹ் வரவேற்று பேசினார்.இந்நிகழ்வில் சி.டி.சி. கார்னர் பகுதியில், பெரிய தோட்டம் பகுதியில் கொடியினையும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. கொடியேற்றி கருத்துரை வழங்கினார்.

மேலும் தமுமுக மாநில செயலாளர் கோவை சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில செயலாளர் கோவை அம்ஜத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நடைபெற்ற கருத்தரங்கத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் செரங்காடு கிளை பகுதியைச் சார்ந்த 20 மேற்பட்ட மாணவர்கள் தங்களை சமூக நீதி மாணவர் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.முடிவில் சேலம் மண்டல செயலாளர் முகமது இக்பால் நன்றி கூறினார்.

The post திருப்பூரில் சமூக நீதி மாணவர் இயக்க கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Social Justice Student Movement Seminar ,Tirupur ,Social Justice Students' Movement ,D.M.M.K. District ,President ,Naseerdeen ,Humanist People's Party Tirupur North District ,Abu Salih ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்