×

மதுகுடிக்க பணம் இல்லாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

ஜீயபுரம், பிப்.6: ஜீயபுரம் அருகே கொடியாலம் புலிவலத்தில் மது போதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜீயபுரம் அருகே கொடியாலம் புலிவலத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மணிகண்டன் (27). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மணிகண்டன் வேலை எதுவுமின்றி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்க பணம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மதுகுடிக்க பணம் இல்லாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Jeepura ,Jeepuram ,Mariyappan ,Manikandan ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது