×

நீடாமங்கலத்தில் பெட்டிக்கடையில் ₹2,000 திருட்டு

 

நீடாமங்கலம்,பிப்.6: நீடாமங்கலத்தில் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2000 ரொக்கம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் சாலையில் திருவேங்கடம் (47 )என்பவர் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ. 2000 ரொக்கம், சிகரெட் பாக்கெட்டுகள், மசாலா பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீசாருக்கு திருவேங்கடம் தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நீடாமங்கலத்தில் பெட்டிக்கடையில் ₹2,000 திருட்டு appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Thiruvenkadam ,Needamangalam District Old Needamangalam Road ,
× RELATED திருவேங்கடம் அருகே பயங்கரம் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்