×
Saravana Stores

ஓராண்டில் செயல்பாட்டுக்கு வந்தது விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

 

அரியலூர், பிப்.6: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாடு – 2024-ல் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். தமிழ் இலக்கியமன்ற தேர்வில் வெற்றிப் பெற்ற பதினொராம் வகுப்பு பயிலும் 17 மாணவ, மாணவிகள் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்களை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று வழங்கினார். இம்மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.18,000 கல்வி உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post ஓராண்டில் செயல்பாட்டுக்கு வந்தது விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Thirukkural conference ,Virudhunagar ,Ariyalur ,Collector ,Anne Mary Swarna ,Thirukkural Student Conference – 2024 ,Virudhunagar district ,Literature Board ,
× RELATED அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை