×

தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற மாணவர்கள்

 

காரைக்கால்,பிப்.6: தென்னிந்திய மாநிலங்கள் பெங்களூரு விஸ்வேஸ்வரா தொழில்துறை தொழில்நுட்ப அருங்காட்சியகம் இணைந்து நடத்தும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா நகரத்தில் 28 ஜனவரியில் இருந்து பிப்ரவரி 1ம்தேதி வரை நடைபெற்றன. இதில் மாணவர்கள் தனி பிரிவில் காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி சஞ்சய் ராம் அதன் வழிகாட்டி ஆசிரியர் ராஜு மற்றும் சேத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி சஞ்சனா அதன் வழிகாட்டி ஆசிரியர் சவிதா மற்றும் கீழக்காசாக்குடி ஆச்சார்யா சிக் ஷா மந்திர் தீரஜ் அதன் வழிகாட்டி ஆசிரியர் சாந்தகுமார் கலந்து கொள்ள சென்றனர்.

மாணவர்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாக நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இக்கண்காட்சியில் மொத்தம் 210 கண்காட்சி பொருள்கள் அறிவியல் கணிதம் தொழில்நுட்ப பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

The post தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : South Indian Science Fair ,Karaikal ,Visveswara Museum of Industrial Technology ,Bengaluru ,Vijayawada ,Andhra ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...