×

பிஎஸ்என்எல்க்கு தரல… அம்பானிக்கு மட்டும் 5-ஜி: மோடியை கலாய்த்த கே.எஸ்.அழகிரி

சென்னை: ‘பி.எஸ்.என்.எல்.க்கு 4-ஜி, 5-ஜி இணைப்பை உங்களுடைய ஒன்றிய அரசு தரவில்லை. உங்களுடைய நண்பர் அம்பானிக்கு மட்டும் 5-ஜி கொடுத்திருக்கிறீர்கள்’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசும் போது முன்னாள் பிரதமர் நேருவை பற்றி பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4-ஜி, 5-ஜி இணைப்பை உங்களுடைய ஒன்றிய அரசு தரவில்லை. ஆனால் உங்களுடைய நண்பர் ஜியோவிற்கு (அம்பானிக்கு) மட்டும் 5-ஜி கொடுத்திருக்கிறீர்கள். இந்திய தேசத்திற்கு உங்களை விட சேவை புரிந்தவர்கள் வேறு யார் இருக்க முடியும்?. இந்த போட்டியில் நேரு, இந்திரா காந்தியோ உங்களோடு சேர்க்க முடியாது தான்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 10ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைதை கண்டித்தும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வரும் 10ம்தேதி பாம்பன் பாலக் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

The post பிஎஸ்என்எல்க்கு தரல… அம்பானிக்கு மட்டும் 5-ஜி: மோடியை கலாய்த்த கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : Ambani ,KS Azhagiri ,Modi ,Chennai ,Union Government ,KS ,Azhagiri ,Former ,Nehru ,President ,Parliament ,
× RELATED அனைத்து முடிவுகளையும் அதானிக்கும்...