×

நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு, அறிக்கை தயாரிப்பு உள்பட 38 குழுக்கள் அமைப்பு: தமிழக பாஜ அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 38 குழுக்களை பாஜ தலைவர் அண்ணாமலை அமைத்துள்ளார், அதன்படி பாஜ தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளராக துணை தலைவர் எம்.சக்கரவர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளராக கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி, எம்.நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு பொறுப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, இணை பொறுப்பாளராக முன்னாள் எம்பிக்கள் கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், பொது செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அலுவலக பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி, இணை பொறுப்பாளராக மாலா செல்வகுமார், காயத்ரி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை தயாரிக்க பொறுப்பாளராக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இணை பொறுப்பாளராக அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் சட்ட விவகாரம், தேர்தல் கமிஷனை சந்திக்கும் வகையில் பொறுப்பாளராக முன்னாள் டிஜிபி வி.பாலச்சந்தர், இணை பொறுப்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கால் சென்டர், அலுவலக நிர்வாகம், ஊடகத்துறை, டிஜிட்டல் துறை, கலாசார விளம்பரம், தெருக்கூட்டம், மகளிர், இளைஞர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரசாரக்குழுக்கள், பூத் பணி என மொத்தம் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு, அறிக்கை தயாரிப்பு உள்பட 38 குழுக்கள் அமைப்பு: தமிழக பாஜ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Chennai ,president ,Annamalai ,Vice President ,M. Chakraborty ,BJP election coordination committee ,KS Narendran ,Narayanan ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...