×

ரயில்வேயில் இந்த ஆண்டு அதிக வேலைவாய்ப்பு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே ஆண்டு காலாண்டர் பிப்.3ல் வெளியிடப்பட்டது. அதில் இந்த ஆண்டு நடத்த உள்ள ரயில்வே தேர்வு பட்டியல் இடம் பெற்று உள்ளது. இதுபற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வே தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் உதவி லோகோ பைலட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழில்நுட்ப பதவிகளுக்கான ஆட்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரை, ரயில்வேயில் இளநிலைப் பொறியாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் சேர விரும்புபவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள். நிலை 1 பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆண்டுக்கு நான்கு முறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

 

The post ரயில்வேயில் இந்த ஆண்டு அதிக வேலைவாய்ப்பு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union ,minister ,New Delhi ,Railway Minister ,Ashwini Vaishnav ,Railway Selection Board ,Union minister ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...