×

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரம் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ஆன் லைன் ரம்மி விளையாட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு ஒன்றிய அரசு மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு,போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ஆன் லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தினால் நடக்கும் தற்கொலைகள், குற்றச்சாட்டுகள் ஆகியவைக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதுகுறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணைய ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

The post ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரம் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Union govt ,Tamil Nadu govt ,Supreme Court ,NEW DELHI ,Union government ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக...