×

மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் 5 மணி நேரம் விசாரணை

கோவை: மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைவி3 நிறுவனத்தார் மற்றும் நிறுவனம் மீது கடந்த 19-ம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜரான சக்தி ஆனந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள 10000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்திடம் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் 5 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore Economic Offenses Division police ,Shakti Anand ,MyV3 ,Coimbatore ,Sakthi Anand ,Dinakaran ,
× RELATED மைவி3 நிறுவன உரிமையாளர் விஜயராகவன்...