×

மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் – 4,
மாங்காய் இஞ்சி – 50 கிராம்,
கொத்துமல்லித் தழை – கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 2,
புளி – சிறிதளவு,
துருவிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட் மற்றும் தோசையின் மேலே தடவி சாப்பிடவும் சுவையாக இருக்கும். இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான `மாங்காய் இஞ்சி – நெல்லிக்காய் சாதம்’ தயார்.

The post மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...