×

சாலை ஓரம் கற்களை நட்டு துணியை போர்த்தி பூஜை செய்து சிலை என கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட்

சென்னை: சாலை ஓரம் கற்களை நட்டு துணியை போர்த்தி பூஜை செய்து சிலை என கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாலையில் நடப்பட்ட கல் சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளது. சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒருவாரத்தில் அகற்றும்படி பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சாலை ஓரம் கற்களை நட்டு துணியை போர்த்தி பூஜை செய்து சிலை என கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,High Court ,Court of Law ,Dinakaran ,
× RELATED குற்றப்பிரிவு வழக்கு ரத்து...