×

பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்? -நீதிபதி கேள்வி

மதுரை: பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்? உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பட்டாசு தொழிற்சாலைகளின் மேற்பார்வையாளராக செயல்படும் அலுவலர்கள் யார்? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டம் எதிர்கோட்டையைச் சேர்ந்த சமுத்திரவள்ளி என்பவர் ஐகோர்ட் மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்தார். 2014-ல் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் எனது கணவர் காளிமுத்து உட்பட 6 பேர் உயிரிழந்தனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யார்? -நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Branch ,High Court ,iCourt ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...