×

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி… ஏமாற்றத்தில் பாஜக

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சம்பாய் சோரன் அரசு தப்பியது. பாஜவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த மாதம் 31ம் தேதி பதவியில் இருந்து ராஜினாமா செய்த உடனேயே நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய முதல்வராக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் கடந்த 2ம் தேதி பதவி ஏற்றார்.

இந்நிலையில் அம்மாநில ஆளுநர் இன்று சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஜார்கண்ட் சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். மேலும் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அமலாக்க இயக்குனரகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ஹேமந்த் சோரன், சம்பாய் சோரன் ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. 81 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் தேவை. இதில் 47 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு மெஜாரிட்டி இருந்ததால் அவரது அரசு தப்பியது. இதன் மூலம் முதல்வர் பதவியை அவர் தக்க வைத்துள்ளார். பாஜவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் உள்பட 29 பேர் வாக்களித்தனர்.

The post ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி… ஏமாற்றத்தில் பாஜக appeared first on Dinakaran.

Tags : Sambai Soran government ,Jharkhand Legislature ,BJP ,RANCHI ,SAMBAI SORAN ,JHARKHAND ,Sambai Soren ,Baja ,Jharkhand Mukti Morcha-Congress ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...