×

நிர்வாண போட்டோவை காட்டி மிரட்டி பிளஸ் 1 மாணவி தொடர் பலாத்காரம்: மாணவர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே நிர்வாணப் போட்டோக்களை காட்டி மிரட்டி பிளஸ் 1 மாணவியை ஒன்றாகப் படிக்கும் பள்ளி மாணவர்கள் உள்பட 18 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமானார்கள். அதன்படி ஒருவருக்கொருவர் தங்களது நிர்வாண போட்டோக்களை பரிமாறிக் கொண்டனர்.

இது விபரீதத்தில் முடியப்போகிறது என்பதை மாணவி முதலில் அறிந்திருக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர், நிர்வாண போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி மாணவியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று பலாத்காரம் செய்து உள்ளார். அதன் பிறகு நிர்வாணப் போட்டோக்களை நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளார். இதையடுத்து வாலிபரின் நண்பர்களும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து உள்ளனர். நாளுக்கு நாள் அவர்களது தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து மாணவி பயந்து பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் கவுன்சிலிங்குக்காக குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் தான் இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவருடன் ஒன்றாகப் படிக்கும் மாணவர்கள் உள்பட 18 பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பள்ளி மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிளஸ் 1 மாணவியை 18 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிர்வாண போட்டோவை காட்டி மிரட்டி பிளஸ் 1 மாணவி தொடர் பலாத்காரம்: மாணவர்கள் உள்பட 18 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Pathanamthita, Kerala ,Kerala ,Spits ,Pathanamthita ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்