×

சுண்ணாம்பு குட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்

*மாற்றியமைக்க கோரிக்கை

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு குட்டை தேசிய நெடுஞ்சாலை அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டிரான்ஸ்பார்மரை இரு பக்கமும் தாங்கி நிற்கும் சிமென்ட் கம்பம் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.இதன் ஒரு கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது.இதனால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுண்ணாம்பு குட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Tags : Nattrampalli ,Sunampu Kuttai ,Mallapalli panchayat ,Tirupattur district ,
× RELATED நாட்டறம்பள்ளி அருகே விபத்தில்...