×

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: பிப்.10ல் தொடங்கி ஒருவாரம் நடைபெறலாம் என தகவல்

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது. சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் செம்மொழி பூங்காவில் இந்த மலர் கண்காட்சி மூன்றாவது ஆண்டாக நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மலர் கண்காட்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த மலர் கண்காட்சி நடைபெறும் செம்மொழி பூங்காவில் ஏற்கெனவே அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கண்காட்சியில் 10 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பிப்.10ல் தொடங்கும் மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம் வரை நடைபெறலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: பிப்.10ல் தொடங்கி ஒருவாரம் நடைபெறலாம் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Flower Show ,Semmozhi Park ,CHENNAI ,Chennai Semmozhi Park ,Dr. Radhakrishnan Road, Chennai ,Krishnagiri ,Kodaikanal ,Kumari ,
× RELATED தேக்கடி மலர்க் கண்காட்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு