×

நாடாளுமன்ற தேர்தல்!: தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 38 குழுக்களை அமைத்தது தமிழக பாஜக..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மாநில தேர்தல் மேலாண்மை குழுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்ற தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது. இந்நிலையில்,

38 குழுக்களை அமைத்தது தமிழக பாஜக:

நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை தமிழக பாஜக அமைத்துள்ளது. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கால் சென்டர், வீடியோ வேனுக்கு தேர்தல் குழு:

* தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டோகாலுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* அலுவலக நிர்வாகம், வாகனம், வீடியோ வேனுக்கு தனித்தனி குழுக்களை பாஜக அமைத்தது.

பட்டியல், பழங்குடியினத்துக்கு தனி பிரச்சாரக்குழு:

* பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும் உரையை அச்சிட தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

* மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழு அமைப்பு.

* தேர்தல் அறிக்கை தயாரிக்க எச்.ராஜா, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

குற்றப்பத்திரிகைக்கு தனி தேர்தல் குழு:

* குற்றப்பத்திரிகை தயாரிக்க பாஜக மாநில செயலாளர்கள் எஸ்ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல்!: தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 38 குழுக்களை அமைத்தது தமிழக பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Election Coordination Committee ,Report Preparation Committee ,Chennai ,BJP ,Annamalai ,election management ,Tamil Nadu ,M. K. ,A. Thu. M. K. ,Tamil Nadu Party ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...