×

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் காலை நேரத்தில் புகைப்படம் எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

மேட்ரிட்: வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட் நகரில் காலை நேரத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளமான எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ளார். தமிழகத்திற்கு வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.

இன்றைய தினமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை நேரில் சந்திக்க இருக்கிறார். இந்த சூழலில், ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட் நகரில் காலை நேரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி, விடியல் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் கூறி வரும் நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலும், ஸ்பெயின் நாட்டில் விடியல் கனவுகள்…மேட்ரிட் நகரத்தில் சூரிய உதயம் என பதிவிட்டுள்ளார்.

The post ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் காலை நேரத்தில் புகைப்படம் எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Madrid ,Spain ,K. Stalin ,X Place ,Minister ,H.E. K. Stalin ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா