×

பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசுகிறார்: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரை.. பா.ஜ.க. எம்.பி.க்களும் முக்கிய அறிவுரை!!

டெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். மக்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பேசவுள்ள பிரதமர் மோடி நாளை மாநிலங்களவையில் பேசுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி இன்று பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசுகிறார். அப்போது பா.ஜனதாவின் 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சிகள் குறித்தும் விமர்சனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைக்கு இன்று அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடியின் உரை மீது எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசுகிறார்: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரை.. பா.ஜ.க. எம்.பி.க்களும் முக்கிய அறிவுரை!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Pa. J. K. M. B. ,Delhi ,PM ,Modi ,Lok Sabha ,People's Assembly ,Pa. J. K. M. B. People ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...