×

நடன நிகழ்ச்சியில் உலக சாதனை நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு

 

ஆரல்வாய்மொழி, பிப்.5: சேலம் அரியலூர் மலைச்சரிவில் அமைந்துள்ள 1008 சிவலிங்கம் கோவிலில் 1008 லிங்கம் முன்பு சிவமும், பரதமும் என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்ட 1008 பரதநாட்டிய கலைஞர்கள் திங்கள் சூரிய நாதனே என்ற பாடலுக்கு ஒரே நேரத்தில் நாட்டியமாடி உலக சாதனை படைத்தனர்.

துபாய் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் என்ற அமைப்பு இந்த நிகழ்வை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதில் கலந்துகொண்டு நாட்டியமாடிய மாணவிகளுக்கு நாட்டிய சிற்பம் என்னும் விருதும், நாட்டிய பள்ளி ஆசிரியர்களுக்கு பரத கலா சிற்பி விருதும் வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் சிதம்பரசெல்வி, அஸ்விதா, பூஜாஸ்ரீ,தர்ஷினி ராமலட்சுமி, மீதுனா சந்திரன், மௌலிதா மற்றும் அமிர்தா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நாட்டிய சிற்பம் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நாஞ்சில் நாட்டிய ஆலய இயக்குனர் பொன்னம்மாள் என்பவருக்கு பரத கலா சிற்பி விருதும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர். அவர்களை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். தோவாளையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதாராணி மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

The post நடன நிகழ்ச்சியில் உலக சாதனை நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Aralwaimozhi ,Bharatanatyam ,1008 Sivalingam Temple ,Salem Ariyalur ,1008 Lingams ,Dingal ,
× RELATED ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே...