×

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

 

பெரியபாளையம், பிப். 5: பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிக அளவில் பக்தர்கள் வருகையால் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தை மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஸ்ரீ பவானி அம்மனுக்கு அதிகாலை முதல் பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பாக ஸ்ரீபவானி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ பவானி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து குவிந்ததால் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களால் சென்னை, திருப்பதி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் ஆலய பகுதியில் ஊர்ந்து சென்றது.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Bhavani Amman temple ,Periyapalayam ,Sri ,Periyapalayam, Tiruvallur district ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை