×

ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் நடிகர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார்

சேலம்: சேலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகர் பெஞ்சமின். இவர் திருப்பாச்சி, ஆட்டோ கிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதேபோல் ஓமலூர் அடுத்த பெரியேரிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த அதிமுக, பாமக மற்றும் தேமுதிகவினர், சேலம் அஸ்தம்பட்டி 6வது வார்டை சேர்ந்தவர்கள், பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டவர்களும் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு ராஜேந்திரன் எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுகவில் இணைந்தது பற்றி நடிகர் பெஞ்சமின்,‘முதல்வர் உத்தரவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் ,’என்றார்.

 

The post ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் நடிகர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Benjamin ,DMK ,Rajendran ,MLA ,Salem ,MBBS ,Salem Central District ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு