நாராயண்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் ஓர்ச்சா காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோமகல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு நக்சல்களின் சடலங்கள் மற்றும் இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். இந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் அடையாளம் காணப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
The post சட்டீஸ்கர் வனப்பகுதியில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.