×

புரோ கபடி லீக்கில் இன்று மோதல்; குஜராத்தை பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?

டெல்லி:12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 102வது லீக் போட்டியில், உ.பி.யோத்தா 39-23 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. இதில் முதல் பாதியில் 19-14 என டெல்லி முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தி 25 புள்ளி எடுக்க தெலுங்குக்கு 19 புள்ளி கிடைத்தது.

முடிவில் 44-33 என டெல்லி வெற்றி பெற்றது. 18வது போட்டியில் 11வது வெற்றியுடன் 3வது இடத்தில் டெல்லி நீடிக்கிறது. தெலுங்கு 16வது தோல்வியுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு பெங்களுரு புல்ஸ்-யு மும்பா, இரவு 9 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-தமிழ் தலைவாஸ் மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் மீதமுள்ள 5 போட்டியில் அதிக புள்ளி வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது.

ஏற்கவே நடப்பு சீசனில் டிச. 27ல் மோதிய போட்டியில் 33-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் வென்ற நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

The post புரோ கபடி லீக்கில் இன்று மோதல்; குஜராத்தை பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்? appeared first on Dinakaran.

Tags : PRO KABADI LEAGUE ,GUJARAT ,Delhi ,10th Pro Kabaddi League ,U. B. YOTHA ,MUMBAI ,Pro Kabaddi League ,Tamil Thalavas ,Dinakaran ,
× RELATED குஜராத்தை சமாளிக்குமா டெல்லி? அகமதாபாத்தில் இன்று மோதல்