×

புதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் – கார் மோதி விபத்து – ஒருவர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் சென்றுகொண்டிருந்தது. அதேசாலையில் டாடா ஏஸ் சரக்கு வாகனம் தண்ணீர் எடுத்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சரக்கு வாகனமும் – காரும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் – கார் மோதி விபத்து – ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,National Highway ,Trichi-Karaikudi National Highway ,Pudukkottai district ,Tata Ace Cargo ,
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...