×

காமாட்சி மெடிக்கல் சென்டரில் எலும்பு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம்

 

தஞ்சாவூர், பிப். 4: டெல்டா மாவட்ட மக்களின் நலன் கருதி  காமாட்சி மெடிக்கல் சென்டரில் எலும்பு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 29ம் தேதி தொடங்கியது நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. முகாமில் எலும்பு நோய்ச் சார்ந்த சிறப்பு பரிசோதனைகள் எஸ்க்ரே, கால்சியம், யூரிக் ஆசிட், ஹீமோகுளோபின் , ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.

எலும்பு, மூட்டு முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில் குமார் மற்றும் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிஷோர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் ரூ.499 கட்டணத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கு கொண்டு பயனடைந்தார்கள்.

 

The post காமாட்சி மெடிக்கல் சென்டரில் எலும்பு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Kamachi Medical Centre ,Thanjavur ,Delta District ,Kamatchi Medical Center ,Dinakaran ,
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...