×

புதுகை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வரக்கோரி மகாத்மா காந்தி சமூகநலப்பேரவை உண்ணாவிரதம்

 

புதுக்கோட்டை, பிப்.4: புதுக்கோட்டையிலுள்ள காந்திப் பூங்காவை தனியார் கடைகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை ஏற்பாட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று தொடங்கியது. காந்திப் பூங்கா அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பேரவையின் நிறுவனர் தினகரன் தலைமை வகித்தார்.

காந்திப் பேரவை தலைமை நிலையச் செயலர் மோகனப்பிரியா தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தை ஆதரித்து ஊழல் தடுப்பு இயக்கத்தைச் சேர்ந்த சையது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் சலாஹுதீன், பத்து ரூபாய் இயக்கத் தலைவர் தினேஷ், காவிரி குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மிசா மாரிமுத்து, மரம் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்ய மண்டலப் பொறுப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

The post புதுகை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வரக்கோரி மகாத்மா காந்தி சமூகநலப்பேரவை உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,Puducherry Lok ,Sabha ,Pudukottai ,Gandhi Park ,All India Mahatma Gandhi Social Welfare Council ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பிரசாரத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் வேட்பாளர்