×

தேசிய திறனறி தேர்வை 7,520 மாணவர்கள் எழுதினர்

 

கிருஷ்ணகிரி, பிப். 4: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதை ஊக்குவிக்கவும், உதவித்தொகை வழங்கும் வகையிலும், மத்திய கல்வி அமைச்சகம், தேசிய வருவாய் வழி திறனறிவுத் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 14 தேர்வு மையங்கள், ஓசூர் கல்வி மாவட்டத்தில 12 தேர்வு மையங்கள் என மொத்தம் 26 மையங்களில் நேற்று நடந்தது.

இதில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 4365 பேருக்கு நடந்த தேர்வில் 4,278 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 87 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதே போல் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 3,335 பேருக்கு நடந்த தேர்வில், 3,242 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 93 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. அதன்படி, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் நேற்று நடந்த இந்த தேர்வினை மொத்தம் 7,520 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

The post தேசிய திறனறி தேர்வை 7,520 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Union Ministry of Education ,
× RELATED சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரிக்கு 3வது இடம்