×

அன்னபூரணி கோயிலில் சிறப்பு வழிபாடு

காரியாபட்டி, பிப். 4: காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், திருநீர் பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சியளித்தார். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post அன்னபூரணி கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Annapoorani Temple ,Kariyapatti ,Annapoorani Amman temple ,Thonugal village ,Annapurani temple ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு