×

கம்பம் பகுதியில்மொச்சைக்காய் விளைச்சல் அமோகம்

கம்பம், பிப். 4: கம்பம் பகுதியில் மொச்சைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை குறைந்தது.கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம் ,கூடலூர் ,லோயர்கேம்ப், ஆகிய ஊர்களில் அடிவாரப் பகுதிகளில் மானாவரி நிலங்களில் மொச்சைக்காய் பயிரிடப்படுகிறது.

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை விளைச்சல் தரக்கூடிய மொச்சைக்காய் டிசம்பர் மாதம் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டது .படிப்படியாக விளைச்சல் அதிகரித்து வரத்து கூடியதால் ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மொச்சைக்காய் நல்ல விளைச்சலில் உள்ளதால் கிலோ ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொச்சைக்காய் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கம்பம் பகுதியில்மொச்சைக்காய் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Kambam ,Kampham ,Amochaikai ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு செயல்விளக்கம்