×

மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

புழல்: புழல் ஏரியில் கடந்த 1ம் தேதி மயாமான பள்ளி மாணவனை, போலீசார் சடலமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாராவரிகுப்பம் திருவள்ளுவர் தெரு சேர்ந்த முரளி – மதிவதனி தம்பதியின் மகன் சுனில்(16). இவர், செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி சுனில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால், சுனிலை ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று பெற்றோர் கேட்டதால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகன் சுனிலை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் 2ம் தேதி புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை புழலேரி மதகு அருகே தண்ணீரில் சடலம் இருந்ததை கண்ட செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டு, விசாரணை செய்ததில் காணாமல்போன பள்ளி மாணவன் சுனில் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mysterious Schoolboy Corpse Rescue ,Puzhal ,Puzhal Lake ,Sunil ,Murali-Mathivathani ,Tiruvalluvar Street ,Naravarikuppam ,Sengunram ,Mysterious Schoolboy ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...