×

கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகையில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி, பேருந்து நிறுத்தம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகை ஊராட்சியில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் பேருந்து நிறுத்த பணியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சிக்குட்பட்ட ஜி.ஆர்.கண்டிகை, சூறாவளி கண்டிகை, பில்லா குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி அனைவரயும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதம்மா முத்துசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முன் ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் திமுக நிர்வாகிகள் யுகேந்திரன், ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, ஜெயந்தி கெஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள், சமையல் கூடம் அமைப்பது குறித்து தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேஷ், ஊாராட்சி தலைவர் ரவியிடம் ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்வு நடைபெற்றது.

இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ரவி, ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், ஒன்றிய செயலாள பரிமளம், மணிபாலன், திமுக நிர்வாகிகள் மணி, பாஸ்கரன், காளத்தி, சுகு, ரவி, திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து எம்எல்ஏ அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The post கும்மிடிப்பூண்டி அருகே குருவராஜகண்டிகையில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி, பேருந்து நிறுத்தம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Guruvarajakandikai ,Kummidipoondi ,DJ Govindarajan ,Guruvarajakandikai panchayat ,Guruvarajakandigai ,GR Kandigai ,Panchayat ,Cyclone ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...