×

டாக்டராக இருந்தாலும் ஆக்டராக இருந்தாலும் கட்சி தொடங்கலாம் பெரியார் பல்கலை. முறைகேடு பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் நடந்துள்ள முறைகேடுகளை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்தார். சேலத்தில் பாமக சார்பில் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். கூட்டத்துக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் கூட்டணி குறித்து பாமக விரைவில் முடிவு செய்து அறிவிக்கும். தேசிய கட்சியுடன் கூட்டணியா அல்லது மாநில கட்சியுடன் கூட்டணியா என்பது அப்போது தெரிந்துவிடும். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் நீதிமன்றத்திற்கு எதிராக கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். கேரள ஆளுநர் முல்லை பெரியாரில் புதியதாக அணை கட்டுவோம் என தெரிவித்துள்ளார். அங்கு புதிய அணை தேவை இல்லாத ஒன்றாகும். நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். டாக்டராக இருந்தாலும், ஆக்டராக இருந்தாலும் சரி. கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் நடக்கும் மோதலால் பல்கலைக்கழகங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு சட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. அதை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும். தமிழக அரசு வெள்ள நிவாரணத்திற்காக ரூ.37 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால் வழங்கப்படாமல் உள்ளது. எல்லா மாநிலமும் ஒன்று என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post டாக்டராக இருந்தாலும் ஆக்டராக இருந்தாலும் கட்சி தொடங்கலாம் பெரியார் பல்கலை. முறைகேடு பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Anbumani ,Salem ,Salem Periyar University ,BAMAK ,PMK ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...