×

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்காத ஒன்றிய அரசு மற்றும் புதுச்சேரி அரசை கண்டித்து புதுவை அதிமுக சார்பில் வருகிற 10ம் தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி கடலூர் சாலை ஏஎப்டி மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டப்பேரவை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்பி தலைமையிலும், புதுச்சேரி மாநில செயலாளர் ஏ.அன்பழகன் முன்னிலையிலும் நடைபெறும்.

 

The post புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Union government ,Puducherry ,Edappadi ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,Puducherry Cuddalore ,Puducherry government ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக...