×

அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் மரியாதை: அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: அண்ணாவின் 55வது நினைவுநாளையொட்டி, மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அண்ணாவின் 55வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி. திமுக சார்பில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி நடந்தது.

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகித்தார். பேரணியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், சி.வீ.கணேசன், மெய்யநாதன், மூர்த்தி, செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்பிக்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், சென்னை மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், இளைய அருணா, எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், டாக்டர் எழிலன், வெற்றியழகன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு தலைவர் ரங்கநாதன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பகுதி செயலாளர் மதன் மோகன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர்கள் பி.டி.பாண்டி செல்வம், வி.பி.மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அமைதி பேரணி நிறைவடைந்தது. திமுக பொது செயலாளர் துரைமுருகன் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

The post அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் மரியாதை: அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Peace Rally ,Duraimurugan ,Anna Memorial ,Chennai ,Anna ,memorial ,Marina ,general secretary ,Walaja ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி