×

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடி மாற்றம் அரசு வழக்கறிஞர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களுக்கான இலாகாவை ஒதுக்கீடு செய்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் துறை வாரியான வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள் இதுவரை 3 மாதங்களுக்கு ஒரு முறை துறை மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் அனைத்து துறைகளின் வழக்குகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் அரசு வழக்கறிஞர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன் விபரம் வருமாறு: இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளில் சிறப்பு அரசு பிளீடர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், கூடுதல் அரசு பிளீடர் எஸ்.ரவிச்சந்திரன், அரசு வழக்கறிஞர்கள் கே.கார்த்திகேயன், எஸ்.பி.கார்த்திக் ஆஜராவார்கள். வணிகவரி துறைக்கு சிறப்பு அரசு பிளீடர் என்.வெங்கடேஷ்வரன், கூடுதல் அரசு பிளீடர்கள் டி.என்.சி.கவுசிக், சி.ஹர்ஸராஜ், அரசு வழக்கறிஞர்கள் வி.பிரசாந்த் கிரண், கே.வசந்தமாலா ஆஜராவார்கள். சிவில் வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன், கூடுதல் அரசு பிளீடர் எஸ்.சூரியாவும், மத்தியஸ்தம் தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.ஜீவாகிரிதரன், கூடுதல் அரசு பிளீடர் ஆர்.யு.தினேஷ் ராஜ்குமார், அரசு வழக்கறிஞர்கள் அமிர்தா பூங்கொடி தினகரன், சி.சதீஷ் ஆஜராவார்கள். மாநில அரசு பிளீடர் ஏ.எட்வின் பிரபாகர், சிறப்பு அரசு பிளீடர் டாக்டர் டி.சீனிவாசன், கூடுதல் அரசு பிளீடர் இ.ரங்கநாயகி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆர்.சித்தார்த், அமிர்தா பூங்கொடி தினகரன் ஆகியோர் மத்தியஸ்தம் தொடர்பான வழக்குகளில் ஆஜராவார்கள்.

சிவில் மேல் முறையீடு வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா, கூடுதல் அரசு பிளீடர்கள் பி.தமிழ்நிதி, சி.செல்வராஜ் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் இ.இந்துமதி, வி.ரமேஷ், எம்.முத்துசாமி ஆஜராவார்கள்.
கல்வித்துறையில் பணிசார்ந்த வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.மைத்ரேயி சந்துரு, கூடுதல் அரசு பிளீடர்கள் வி.மனோகரன், பி.குருநாதன், அரசு வழக்கறிஞர் டி.எம்.ராஜாங்கம் ஆஜராவார்கள்.
கல்வித்துறையில் பணிசார வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஎம்.ரவிச்சந்திரன், கூடுதல் அரசு பிளீடர்கள் ஜெ.சி.துரைராஜ், வி.பி.ஆர்.இளம்பரிதி, அரசு வழக்கறிஞர் இ.சுந்தரம் ஆஜராவார்கள்.
உயர் கல்வி துறை தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.ரவிச்சந்தர், கூடுதல் அரசு பிளீடர் கே.சுரேந்திரன், அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராவார்கள். வருவாய் துறை வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன், கூடுதல் அரசு பிளீடர்கள் எஸ்.ஜான் ஜே.ராஜா சிங், டி.அருண்குமார், அரசு வழக்கறிஞர் ஆர்.நீதிபெருமாள் ஆஜராவார்கள். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.அனிதா, கூடுதல் அரசு பிளீடர் ஜி.கிருஷ்ணராஜா, அரசு வழக்கறிஞர் எஸ்.ராஜேஷ் ஆஜராவார்கள்.

கூட்டுறவு துறை குறிப்பிட்ட மாவட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.கீதா தாமரைசெல்வன், கூடுதல் அரசு பிளீடர் பி.சதீஷ், அரசு வழக்கறிஞர் ஏ.எம்.அய்யாதுரை ஆஜராவார்கள்.
கூட்டுறவு துறையில் குறிப்பிட்ட மாவட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.ரவிக்குமார், கூடுதல் அரசு பிளீடர் வி.நன்மாறன், அரசு வழக்கறிஞர் எம்.எஸ்.அரசகுமார் ஆஜராவார்கள். கனிம வளத்துறை தொடர்பான வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் இ.வேதா பகத்சிங், கூடுதல் அரசு பிளீடர்கள் ஸ்டாலின் அபிமன்யு, இ.விஜய் ஆனந்த் ஆஜராவார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.பாலதண்டாயுதம், கூடுதல் அரசு பிளீடர் இ.ரங்கநாயகி, அரசு வழக்கறிஞர்கள் கே.கிஷோர், ஆர்.பி.முருகராஜா, எஸ்.வி.சுப்ராஜா, எம்.பி.அபிராமி, ஜி.அமீடியஸ், கே.திப்புசுல்தான் ஆகியோர் ஆஜராவார்கள். இவ்வாறு அட்வகேட் ஜெனரல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

The post சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடி மாற்றம் அரசு வழக்கறிஞர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,PS Raman ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...