×

உள்ளாட்சி பொறியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனம் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றுக்கு 682 உதவிப் பொறியாளர்கள், 24 இளநிலைப் பொறியாளர்கள், 257 தொழில்நுட்ப உதவியாளர்கள், 367 பணி ஆய்வாளர்கள், 244 துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1933 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே தேர்வு செய்யும் போது, முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே, இந்த பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்டு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

The post உள்ளாட்சி பொறியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Ramadoss ,CHENNAI ,Tamil Nadu ,Ramdas ,Corporations ,Ramadas ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து: ராமதாஸ் வரவேற்பு