×

அண்ணா நினைவுநாளையொட்டி பிஎஸ், ஓபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை: அண்ணாநினைவு நாளையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து தலைமை கழக செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். ந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post அண்ணா நினைவுநாளையொட்டி பிஎஸ், ஓபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna's memorial day ,BS ,OPS ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Anna Memorial ,Marina Beach ,Anna Memorial Day ,Anna ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி