×

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 38 செவிலியர் பயிற்சி கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 38 செவிலியர் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.77 கோடியில் அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.52.93 லட்சத்தில் மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவு என மொத்தம் ரூ.18.30 கோடியில் 2 புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

இங்கு 8 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைப்பதற்கு ரூ.17.77 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அதிநவீன வசதிகளின் கூடிய அறுவை அரங்கங்கள், ஆபரேஷன் தியேட்டர் காம்ப்ளக்ஸ் என்ற திட்டத்தின் வகையில் ஒரு பிரமாண்டமான கட்டமைப்புடன் நிறுவப்பட்டு, பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதே போல் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் 2 தற்காலிக ஆபரேஷன் தியேட்டர்களில் அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தது.

தற்போது, இந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அறுவை சிகிச்சை அரங்கம் மக்களின் பயன்பாட்டிற்க்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் புதிதாக 38 செவிலியர் கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும், விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் மகேஷ்வரன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் திலகவதி, சுகாதார துறை துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், (பொ) பழனி, மருத்துவர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், பிரபுசங்கர், நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை முதல்வர் ரேவதி வரவேற்றார்.

The post தமிழ்நாடு முழுவதும் புதிதாக 38 செவிலியர் பயிற்சி கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Union Government ,Tiruvallur Government Medical College Hospital ,Training ,Tamilnadu ,M.Subramanian ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...