×

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: சென்னை ஓபன் இன்று தொடக்கம்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான போட்டிகளும் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டபுள்யூடிஏ பெண்கள், ஏடிபி ஆண்கள் டென்னிஸ் போட்டிகள் 2022, 2023ல் சென்னையில் நடந்தன. இந்நிலையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து ஏடிபி சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் போட்டியை நடத்துகிறது.

நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் இன்று தொடங்கும் இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீரர்கள், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களமிறங்குகின்றனர். இந்தியா, இத்தாலி, உக்ரைன், ஸ்பெயின், செக் குடியரசு, துனிசியா, ஹாங்காங், சீன தைபே, போலந்து என 14 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கின்றனர். முதல் நாளான இன்று தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதன்மைச் சுற்றின் முதல் சுற்று ஆட்டம் நாளை நடக்கும். இறுதிப் போட்டி பிப்.11ம் தேதி நடக்க உள்ளது.

The post ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: சென்னை ஓபன் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : ATP Challenger Tennis: ,Chennai Open ,Chennai ,ATP Challenger Chennai Open ,WTA Women's ,ATP Men's Tennis Tournaments 2022 ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்