×

தமிழகத்தில் கடந்த டிசம்பரில் நிகழ்ந்த இரட்டை பேரிடர் படிப்பினை குறித்து கலந்துரையாடல்: தலைமை செயலாளர் தலைமையில் நடந்தது

சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த இரட்டை பேரிடர்களின் படிப்பினைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நடந்தது.

சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ‘‘டிசம்பர் 2023ல் நிகழ்ந்த இரட்டை பேரிடர்களின் படிப்பினைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள்” குறித்த ஒரு நாள் கருத்து பரிமாற்ற பயிலரங்கம் நடந்தது. இதில், பங்கேற்ற அலுவலர்கள் தனித்தனியே 7 குழுக்களாக பிரிந்து, விவாதித்து அறிக்கை வழங்கினர். அதன்படி,
* பேரிடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
* உடனடி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் தலைமையில், காவல் துறை தலைமை இயக்குநர் அடங்கிய குழு கலந்துரையாடல் நடந்தது.
* உடனடி நிவாரணம் வழங்குதல் தொடர்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அடங்கிய குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
* உள்கட்டமைப்புகளின் மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் அடங்கிய குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
* வெள்ள தடுப்புக்கான நகர்ப்புற திட்டமிடல் தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில், துறை அதிகாரிகள் அடங்கிய குழு கலந்துரையாடல் நடந்தது.
* சமூக ஈடுபாடுகள் பணி தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் அடங்கிய குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
* மக்கள் தொடர்பு துறை பணிகள் தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் அடங்கிய குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இந்த குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரிடர்களை சந்திப்பதில் தக்க மேல்நடைவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.

The post தமிழகத்தில் கடந்த டிசம்பரில் நிகழ்ந்த இரட்டை பேரிடர் படிப்பினை குறித்து கலந்துரையாடல்: தலைமை செயலாளர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,CHENNAI ,Shiv Das Meena ,Chennai Chief Secretariat ,Namakkal Poet's House ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...