×

ரயில் விபத்தை தடுக்க ‘கவாச்’: ஒன்றிய ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘ரயில் விபத்துகளைத் தடுக்க உதவும் தானியங்கி பாதுகாப்பு கவசமான ‘கவாச்’ உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. தெற்கு மத்திய ரயில்வேயில் 1,465 வழித்தடங்களில் 139 இன்ஜின்களில் கவாச் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழித்தடங்களுக்கு ‘கவாச்’ பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், இந்த நிதியாண்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையானது, 3,040 கிமீ ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், 269 தொலைத்தொடர்பு கோபுரங்கள், 186 நிலைய உபகரணங்களை நிறுவியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

The post ரயில் விபத்தை தடுக்க ‘கவாச்’: ஒன்றிய ரயில்வே அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Railway ,Minister ,New Delhi ,Ashwini Vaishnav ,Rajya Sabha ,Gavach ,South Central Railway ,
× RELATED 49 ஆண்டுக்கு பிறகு ஒன்றிய அமைச்சர் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு