×

தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


திருச்சி: திருச்சி வரும் 7 தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று அளித்த பேட்டி: ஐசிஆர்எஸ் என்பது விளையாட்டு தொடர்பான ஒரு பன்னாட்டு கருத்தரங்கம். இந்த முறை நான் இதன் சேர்மனாக இருக்கும் நிலையில் திருச்சி தேசிய கல்லூரியில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் அமெரிக்கா, ஐரோப்பியா, உக்ரைன் உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டு துறை ஆளுமையினர் மற்றும் துறைவல்லுனர்கள், அனைத்து மாநில உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது விளையாட்டு தொடர்பான எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளேன். இந்த கருத்தரங்கத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். கட்சி துவங்குவது என்பது அவரவர் விருப்பம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போன்றே நானும் விஜய்க்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Anbil Mahesh ,Trichchi ,Tamil Nadu School Education ,Anbil Mahesh Trichchi ,ICRS ,Trichy National ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...